• Mon. Oct 13th, 2025

முஸ்லிம் பெண் தாதிமார்களுக்கான ஆடையில் மாற்றம் வேண்டும் ; பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை!

Byadmin

Jun 8, 2018

(முஸ்லிம் பெண் தாதிமார்களுக்கான ஆடையில் மாற்றம் வேண்டும் ; பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை!)

தாதிமார்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ஆடை மாதிரியில்முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பான

 ஏற்பாடுகள்முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே இது குறித்து சுகாதார அமைச்சுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை மகப்பேற்று நன்மைகள் திருத்தச்சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மகப்பேற்று நன்மைகள்தொடர்பான சட்டமூலத்தில் தொழில்புரியும் கர்ப்பினிதாய்மார்களுக்கு 84 நாட்கள் விடுமுறை வழங்குவது உட்பட இன்னும்பல சலுகைகள் குறித்த சட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது.

தாதிமார்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ஆடை மாதிரியில்முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பான ஏற்பாடுகள்முன்னெடுக்கப்படவில்லை. முன்பு காணப்பட்ட ஆடை மாதிரியில்முஸ்லிம் பெண்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. என்றாலும் புதிய முறைமையில் நீண்ட காற்சட்டையுடன் கூடியமாதிரி வழங்கப்பட்டாலும் எமது கலாசாரத்திற்கு ஏற்ற பாதுகாப்புஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே இது குறித்துசுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரசவ கால விடுமுறையின்போது கணவர் மார்களுக்கும் குறைந்த பட்சம் இரண்டு கிழமை விடுமுறை வழங்கவேண்டும் என்ற நடைமுறையை சில நாடுகளிலே பேணி வருகின்றனர். ஒரு குடும்பத்தின் சுக நலனைப் பேணுவதற்காக பிறக்கின்ற குழந்தையின் நல்ல ஆதாரபூர்வமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கினற விடயம் வரவேற்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *