• Sun. Oct 12th, 2025

ஜகாத் வழங்கும் முறைகள்

Byadmin

Jun 16, 2018

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் என்ற பொதுவான போதனையுடன் முடித்து கொள்ளலாமல் தர்மம் வழங்கும் கடமை யார் மீது? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எவருக்கு கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்ற விதிமுறைகளை இஸ்லாம் வகுத்ததுள்ளது.

ஜகாத்த்தின் நோக்கம் வறுமை ஒழிப்பாகும். எனவே சில்லறை தர்மங்கள் வழங்குவதன் வாயிலாக ஒரு ஏழைக்கு தற்காலிக நிவாரணத்தை அளிக்க முடியுமே தவிர சமூகத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.

வெள்ளி, வைரம், ரொக்கப்படும் கால்நடைகள், வர்த்தகப்பொருட்கள், விளைச்சல் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வைத்திருப்பவர்கள் மீது ஜகாத் கடமையாகும்.

ஒருவர் தம்மிடமுள்ள ரெர்க்கப்பணம், வங்கியிலுள்ள சேமிப்பு, தங்கம் வெள்ளி, வைரம், மாணிக்க கற்கள், வியாபாரத்திற்கான பொருட்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பீட்டை கணக்கிட வேண்டும். அவை 87.5 கிராம் தங்கத்தின் பெருமதிப்பிற்கு அதிகமாக இருப்பின் அவர் மீது ஜகாத் கடமை ஆகிவிடுகிறது. எனவே இன்றைய தங்க விலை நிலவரப்படி ஒருவரின் செலவுகள் போக அவரிடம் 2 1/2 லட்ச ரூபாய் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகிறது. அவர் தனது வருமானத்தில் எஞ்சியதில் 2.5 சதவீதத்தை கணக்கிட்டு அத்தொகையை ஜகாத்தாக வழங்கிட வேண்டும்.

இது போலவே கால்நடைகள், விவசாய பொருட்களுக்கு விதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

எனவே ஒருவர் இவற்றை முறையாக கணக்கிட்டு ஏழைகள், வறியவர்கள், கடனாளிகள், ஜகாத்தை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பயணிகள் ஆகியோருக்கு வழங்க வேண்டும். அத்தோடு அடிமைகளை விடுவிப்பதற்கு இறை மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடப்பட வேண்டும். (திருக்குர்ஆன் 9:60)

ஜகாத்தை ஏழைகளுக்கு கணிசமாக வழங்கி வறுமையை அகற்றுவதே ஜகாத்தின் நோக்கமாக உள்ளதால் ஜகாத்தை ஓரிடத்தில் (பைத்துல்மால்) சேகரித்து வழங்கும் முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலும் பின்னர் வந்த கலீபாக்களின் காலத்திலும் இம்முறை பின்பற்றப்பட்டு வந்தது.

தனிப்பட்ட முறையில் ஜகாத் கொடுப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் கூட்டு முறையில் மூலமே ஏழைகளுக்கு கணிசமாக வழங்க முடியும்.

ஜகாத் பெற உண்மையாகவே தகுதி உடையவர்கள் யார் என்பதையும் அப்போது அறிய முடியும். அத்தோடு ஜகாத் வாங்குபவரின் சுயமரியாதையும் பாதுகாக்கப்படுகிறது.

தொழுகையை சரியான நேரத்தில் அக்கறையோடு இறையச்சத்தோடும் நிறைவேற்றுவதை போல ஜகாத்தையும் முறையாக கணக்கிட்டு ஜகாத் பெற தகுதியானவர்களிடம் சேர்ப்பித்து விட வேண்டும். இறைவனின் பார்வையில் தொழுகையும் ஜகாத்தும் வெவ்வேறு அல்ல.

– டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது,
சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *