புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு 520 உலர்உணவூப்பொதிகள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்மூதூர் தோப்பூர் மற்றும் குச்சவெளி பிரதேசங்களைச் சேர்ந்தவறிய குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் சிறிலங்காநிறுவனத்தினால் 12ம் திகதி ஞாயிறு வினியோகம்செய்யப்பட்டன. இவ் வினியோக நிகழ்வுகளுக்கான களஏற்பாடுகளை முஸ்லிம் எய்ட் இன் பங்காளர் அமைப்புகளானரெக்டோ தடயம் பெடோ ஆகிய சமூக சேவை அமைப்புகள்மேற்கொண்டிருந்தன.
ரமழான் மாதம் ஆரம்பத்திலிருந்து உலர் உணவூப் பொதிகளைபல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம் எய்ட் வினியோகித்துவருகின்றது. இம்முறை கடுமையான வெள்ளத்தினால்பாதிக்கப்பட்ட ரத்னபுர மற்றும் மாத்தற மாவட்டத்தைச் சேர்ந்தவறிய குடும்பங்களுக்கான உலர் உணவு வினியோகத்திற்குமுன்னுரிமை வழங்கப்பட்டு ரமழான் மாத தொடக்கத்தில்வினியோகங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் உலமாக்கள் முஸ்லிம்எய்ட் பணியாளர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் இன் பங்காளர்அமைப்புகளின் உறுப்பினர்கள் உலர் உணவு வினியோகநிகழ்வுகளில் பங்கேற்றனர்
-அஸீம் கிலாப்தீன் –