சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் 14 ஆம் திகதி, புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள், மஹியங்கனையின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக பொதுபல சேனா முக்கியஸதர் நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முஸ்லிம் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள சந்திரிக்கா,
நீதிமன்றத்தை ஞானசாரர் அவமதித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பங்கேறுள்ளார். வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசியுள்ளார். இவற்றின் அடிப்படையில் ஞானசார தேரரை கைது செய்து தண்டிக்க வேண்டும்.
இவைபற்றி நான் அரசாங்கத்துடன் பேசுவேன். இல்லையேல் இவை நல்லிணக்கத்திற்கு பெரும் பாதகமாக அமையுமெனவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.