• Sun. Oct 12th, 2025

Month: October 2017

  • Home
  • வில்பத்துவில் 40 பள்ளிவாய்கள் ; போலி பிரசாரங்கள் தொடர்கின்றன

வில்பத்துவில் 40 பள்ளிவாய்கள் ; போலி பிரசாரங்கள் தொடர்கின்றன

வில்பத்து காட்டை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அழிப்பதாக பெரும்பான்மைகடும்போக்காளர்கள் பிரசாரம் முன்னெடுக்கும் நிலையில் வில்பத்துபிரதேசத்தில்  அமைச்சர் ரிஷாத் 40 பள்ளிவாயல்களை நிர்மாணித்துள்ளதாக கடும்போக்குஇணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.முஸ்லிம் நாடுகளின் அனுசரணையுடன் வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்குடியேற்றங்களை அமைப்பதாகவும் இதுவரை 40 பள்ளிவாயல்களைநிர்மாணித்துள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் அரசுக்கு தகவல்வழங்கியுள்ளதாக கடும்போக்கு இணையதளங்கள் செய்திவெளியிட்டுள்ளன. பொதுபல சேனாவுடன் சமரசம் பேச அமைச்சர் ரிஷாத் மறுத்துள்ளநிலையில் மீண்டும் அவருக்கு எதிரான பிரசாரங்கள் பொதுபல சேனா முகநூல் மற்றும் அதன் ஆதரவு இணையதளங்களில் முன்னெடுக்கப்படுவதுகுறிப்பிடத்தக்கது.

சீதனமில்லா என் தேசம்!

வார்த்தைகளுக்குட்பட்டது வசனம்! வரையரைகளுக்குட்பட்டது வாழ்க்கை! பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கின்ற தூரத்தை வாழ்ந்து முடித்தல் பற்றி வரையரைகள் அமைத்து அவ்வப்போது எழுகின்ற அத்தனை முரண்களுக்குமான தீர்வுப்பொதியையும் எமக்களித்து செழுமையான வாழ்வொன்றை  செப்பனிட்டுக்கொள்ள அத்தனை கதவுகளையும் திறந்து கொடுத்திருக்கிறது எம் சத்திய…

பிபில முஸ்லிம் வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்

அமைச்சின் ஊடகப்பிரிவு- பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து  அட்டகாசம் புரிந்துஅங்குள்ள வர்த்தகர்களை தாக்கிய நபர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறும் அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்திமக்களின் சுமுக வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர்றிஷாட் பதியுதீன் ஊவா மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரேமசாந்த அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். எந்த விதமான காரணங்களுமின்றி கலவரங்களை ஏற்படுத்தும்நோக்கில் செயற்படும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்இவர்களின் செயல்கள் மேலும் எல்லை மீறி இன மோதலுக்கு  வழிவகுக்கும் என பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர்சுட்டிக்காடியுள்ளார். அமைச்சரின் கோரிக்கைக்கு பதில் அளித்த பிரதிப்பொலிஸ்மா அதிபர்இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரை பொலிசார்  ஏற்கனவேகைதுசெய்துள்ளதாகவும் ஏனையவர்களையும் கைதுசெய்வதற்குநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  உறுதியளித்தார். அத்துடன் அந்த பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி அமைதியைநிலைநாட்ட மேலதிக பொலிசார் கடமையில்ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் தொடர்பில்மொனராகலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமானவிஜித் விஜித முனி செய்சா உடனும் அமைச்சர் தொடர்புகொண்டார். பிபிலை நகரம் மற்றும் கொடிகட்டுவ மிஸ்பா பள்ளிவாசல்களின்தலைவரும் வர்த்தகருமான சமுகசேவையாளர் ஒரு மாரடைப்பினால்காலமான செய்தியறிந்த, பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர்  நேற்றுவெள்ளிக்கிழமை வெடிகொளுத்தி ஆரவாரம் செய்ததோடு பிபில நகரமுஸ்லிம் கடைகளுக்குள் வேண்டுமென்றே புகுந்து அட்டகாசம்புரிந்திருந்தனர்  இவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் மூவர்காயமுற்றதுடன் ஒருவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றுவருவது  குறிப்பிடத்தக்கது.

35 வயதை அடைந்திருந்தாலேயே முச்சக்கர வண்டி செலுத்தலாம் ? விரைவில் சட்டம்

நாட்டில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சிடம் போக்குவரத்து அமைச்சர் இன்று…

ரத்னசார தேரருக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த தேரர் அடையாள அணிவகுப்பொன்றுக்கும்…

சீரழிந்து வரும் முஸ்லிம் மாணவிகள்! பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்!

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும்,நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம்…

நடுக்கடலில் ஆபத்தில் சிக்கிய இந்திய கப்பல்.. விரைந்து சென்று காப்பாற்றிய இலங்கை கடற்படை!

நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பலில் இருந்த 07 பேரே இவ்வாறு இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறித்த இந்திய சரக்குக் கப்பல் காலியில் இருந்து சுமார் 65…

இஸ்லாத்திற்கு மாறுவோம்: கிறிஸ்தவ கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை!

புயலால் சேதமடைந்த தமது தேவாலயத்தை பாதுகாத்து தராவிட்டால் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக செர்பியா நாட்டு கிராமம் ஒன்றின் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைநகர் பெல்கிரேட்டுக்கு அருகில் இருக்கும் பரிஷ் கிராம மக்கள் செர்பிய ஓர்தடொக்ஸ் திருச்சபைக்கு கடிதம் ஒன்றை எழுதி இந்த…

இஸ்லாமிய நாகரீகம் மேற்கத்தய நாகரீகத்துடன் ஒரு ஒப்பீடு

இஸ்லாமிய நாகரீகம் அது அல்லாத ஏனைய நாகரீகங்களை விட தன் இலக்கிலும் அடிப்படையிலும்   தனியாகவே காணப்படுகிறது. இஸ்லாமிய நாகரீகம் தன்னை குர்ஆண் மற்றும் சுன்னா வழியில் வழிகாட்டுகிறது. இன்னும் மனித வாழ்விற்க்கு ஒரு சிறந்த நாகரீகமாகவும் உள்ளது. ஏனென்றால் அது…

மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வரின் நூல் வெளியீட்டு விழா

எதிர்வரும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி மாலை 04 மணிக்கு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ள முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் அஸ்வரின் நினைவுக் கூட்டம் மற்றும் நூல் வெளியீடு ஆகியவை சம்பந்தமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும்…