ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை, வாபஸ் பெறமாட்டேன் – சிராஸ் நூர்தீன் திட்டவட்டம்
பொதுபல சேனா செயலாளர் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளைஒருபோதும் வாபஸ் வாங்கப் போவதில்லையென மூத்த முஸ்லிம்சட்டத்தரணியும், முஸ்லிம் சமூக ஆர்வலரும், கொழும்பு பள்ளிவாசல்கள்சம்மேளன செயலாளருமான சிராஸ் நூர்தீன் திட்டவட்டமாக குறிப்பிட்டார். ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறப் போவதாக சிலதகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிராஸ் நூர்தீனிடம்தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார், அவர் மேலும் கூறியதாவது, ஞானசாரர் தொடர்புடைய வழக்குகளை சட்டமா அதிபரே கையாள்கிறார். முஸ்லிம் சமூகத்தின் நலன்களின் மீது அக்கறை கொண்ட ஒருசட்டத்தரணியே நான். சட்டத்தரணி என்றவகையில் என்னால்கூடஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கமுடியாது. முஸ்லிம் சமூகம் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கைகாற்றில் பறக்கும் படியாகவோ அல்லது முஸ்லிம் சமூகத்தைகாட்டிக்கொடுக்கும் படியாகவோ எனது செயற்பாடுகள் ஒருபோதும்அமையாது. மேலும் இங்கு சகலரும் அறியவேண்டிய ஒருவிடயம் உள்ளது. அதாவது ஞானசாரருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து, முஸ்லிம்சட்டத்தரணிகளாகிய நாம் தொடுத்த இந்த வழக்கினாலேயே,ஞானசாரர்ஓரளவுக்கேனும் அமைதியாகவுள்ளார். இந்த வழக்குகளை நாம் தொடுத்திராவிட்டால், ஞானசாரரின் ஆட்டம்இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அத்துடன் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டால், அவர் திருந்தி விடுவதற்கான எத்தகைய உத்தரவாதங்களும் நம்மிடம்இல்லை. இந்தநிலையில் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குவதுஎந்தவகையில் நியாயம்..? எனவே ஞானசாருக்கு எதிராக, நாம் தொடுத்த வழக்குகளை வாபஸ்வாங்கமாட்டோம் என்பதை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மிகுந்தபொறுப்புடனும், திட்டவட்டமாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் சிராஸ் நூர்தீன் மேலும் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைப்பு
புகையிரத சாரதிகள் முன்னெடுக்கும் வேலை நிறுத்தினால் ரயில் சேவைகள் இரத்தாகியுள்ள நிலையில், ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத பாதுகாவலர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு உடனடியாக அழைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். புகையிரத சாரதிகள்…
பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் தொடரும் . ரயில்வே அறிவிப்பு
ரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில் சாரதிகள் போதியளவு வருகை தராவிடின் ரயில் சேவையை நடாத்த முடியாமல் போகும் என…
கோதுமைமா இறக்குமதியை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கமாட்டோம் – ரிசாத்
கோதுமைமா இறக்குமதியை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கோதுமை மா ஒரு கிலோவுக்கான செஸ்வரி 15 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை…
‘ஜனாதிபதி தாத்தா’ றிஸ்வி முப்தியிடம் கையளிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்டு அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்ட ‘ஜனாதிபதி தாத்தா’ என்ற நூல் சர்வமதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவைகயில் ஜனாதிபதியின் மகள், அகிண இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவரிடமும், அந்த நூலை கையளிப்பதை காண்கிறீர்கள்.
இரேஷா டி சில்வா பிணையில் செல்ல அனுமதி..
கொவர்ஸ் நிறுவன பணிப்பாளர் இரேஷா டி சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி விவகாரம் தொடர்பில், இன்று (10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு…
2018 பட்ஜெட் ஒதுக்கீட்டுச்சட்டமூலம். முழு விபரம் இதோ!
2018 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்சட்டமூலம் நேற்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு, சுகாதாரம், உயர்கல்வி, மாகாண சபைகள், சக வாழ்வு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சுக்கள் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் ஊடகத்துறை…
“முஸ்லிம்களை அடிமைகளாக மாற்ற ஹக்கீமும் றிஷாத்தும் துணை போகின்றனர்” – அதாவுல்லாஹ்
கிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள்…
கபீர் ஹசீம், மலிக் சமரவிக்ரமவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பானை
அமைச்சர் கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளைய தினம் அவர்களை விசாரணைக்கு வருமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.(dc)