பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை
பொதுப் போக்குவரத்தின்போது இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து…
லிட்ரோ காஸ் விலையில் திருத்தம்
லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் சில்லறை விலை திருத்தத்தை இன்று (06) வியாழக்கிழமை அறிவிக்க உள்ளது. இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்துடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்…
’வறுமையை சரியாக மதிப்பீடு செய்யவும்’
அரசாங்கம் முதலில் நாட்டின் வறுமைக் கோட்டை மிகச் சரியாகக் கணக்கிட வேண்டும். இவ்வாறு கணக்கிடாமை பிரச்சினையாக இருந்து வருகின்றது. இதன் மூலம் உண்மையான ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கையை தீர்மானித்துக் கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை…
’1,700 ரூபாயை பெற்றுக் கொடுப்போம்’
சம்பள நிர்ணய சபையுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளைப் போலன்றி, தற்போது அது தொடர்பாக முறையான இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும் எனவும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க சபையில்…
மாலையில் அல்லது இரவில் சிறிதளவு மழை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக…
மோசடி விளம்பரங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை
சிறிய முதலீடுகளுக்கு கணிசமான நிதி வருமானத்தை வங்கி வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி (CBSL) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த, மத்திய…
புதிய செயலாளர் நியமனம்
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பி. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று (மார்ச் 05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
பொலிஸ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
போக்குவரத்து பிரிவுகளில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க இலங்கை பொலிஸ் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளை 01.02.2025 முதல் 25 சதவீதம் அதிகரிக்குமாறு, பதில் ஐஜிபி, மூத்த டிஐஜிக்கள், மூத்த அதிகாரிகள் மற்றும்…
சட்டவிரோதமாக வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது
சட்டவிரோதமாக ஒரு SUV மற்றும் ஒரு காரை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தியதற்காக மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல பொலிஸ் அதிகாரிகள் 2024 ஒக்டோபரில் அந்தப் பகுதியில் உள்ள…
தங்க நகை வாங்குவோர் கவனத்திற்கு
நாட்டில் புதன்கிழமை (05) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு தங்கம் மற்றும் நகை சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் புதன்கிழமை (05) அன்று தங்கத்தின் விலை பட்டியல் பின்வருமாறு உள்ளது, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22…