• Sat. Oct 11th, 2025

ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதிமன்றம் பிடியாணை

Byadmin

Jun 15, 2017

நீதிமன்றை அவமதித்தது, மற்றும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் விடுத்தது, மதநிந்தனை ஆகிய குற்றங்களில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் பொதுபல சேனாவின் ஞானசார தேரரை, கைது செய்யுமாறு சற்றுமுன்னர்  கோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இரு தடவைகள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமை காரணமாகவே இந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தன்னை கைது செய்வதை தடை உயர் நீதிமன்றில் தனது சட்டத்தரணி மூலம்  வழக்கு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *