(ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவு 1.4 மில்லியனாக அதிகரிப்பு)
கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை வெற்றிப்பெற்றுள்ளது.
கொழும்பு மாநகரசபையில் 119 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்ற கட்சி உறுப்பினர்களும் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவும் 1.4 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி, போக்குவரத்து, முத்திரை மற்றும் தபால் செலவீனங்களுக்கான நிதி, 13 ஆயிரம் ரூபாவிலிருந்து 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.