• Sat. Oct 11th, 2025

ஜனாதிபதிக்கே தொடர்ந்தும் ஆதரவு: காதர் மஸ்தான்

Byadmin

Oct 28, 2018

(ஜனாதிபதிக்கே தொடர்ந்தும் ஆதரவு: காதர் மஸ்தான்)

தற்போதைய அரசியல் சூழ்நிலையில்  எமது ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவரான ஜனாதிபதிக்கே தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் எனது தெளிவான நிலைப்பாட்டை எனது வன்னி மாவட்ட மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறப்பினரும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான  காதர் மஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த கடினமான சூழ்நிலையில் மிகவும் நிதானமாக செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
கட்சியின பொறுப்பான அமைப்பாளர் என்ற வகையில் எனது கட்சித் தலைவரான ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டிய தார்மீகக் கடமையை நாம் உணர்ந்து செயற்படுகிறோம்.
சில பொறுப்பற்ற ஊடகங்கள் நான் கட்சி மாறப்போவதாக கற்பனை செய்து பொய்யான தகவல்களை வெளியிடுவதை நானும் கட்சியும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது ஊடகத் தர்மத்தை கேள்விக்குட்படுத்தும் வங்குரோத்துதனத்தின் பிரதிபலிப்பாகும்.
செய்திகளை வெளியிட முன் உரியவர்களிடம் விடயத்தைக் கேட்டு உறுதிப்படுத்தாமல் பக்கச் சார்பாக செய்தி வெளியிடும் அவசரத்தில் ஊடகங்கள் தடுமாற்றமடைவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எனது சட்ட ஆலோசகர்களை கேட்டிருக்கிறேன்.
ஆகவே இவ்வாறான வதந்திகளை நம்பவேண்டாம் என அனைவரையும கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்.
கெளரவ காதர் மஸ்தான்,
வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும்,
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சரும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக கட்சியின் பிரதம அமைப்பாளர் .
வன்னி மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *