கடந்த வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க டொலரின் பெறுமதி 153.26 ரூபாயாகக் காணப்பட்டதுடன், இறுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி 184.63 ரூபாயாக பதிவாகிய நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி 19 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் ராய்டர் தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது அவசியமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.