(வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 05 அன்று)
2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய குறித்த தீர்மானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.