(நான்கு உறுப்பினர்கள் ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணியில் இணைந்து கொண்டனர்)
மொரட்டுவ மாநகர சபையில் சிறி லங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த நால்வர் சிறி லங்கா பொது ஜன முன்னணிக்கு ஆதரவளித்து ஆளும் கட்சியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற மாதாந்த ஒன்று கூடலின் போது குறித்த நால்வரும் ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணி ஆட்சி புரியும் மொரட்டுவ மாநகர சபையின் நடப்பு வருடத்திற்கான முதலாவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நால்வரும் ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணியில் இணைந்து கொண்டதற்கு அமைய அக்கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 அதிகரித்துள்ளதுடன், எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைவடைந்துள்ளது.