(அரச வாகனங்கள் அனைத்திற்கும் காபன் வரி உள்ளடங்கும்)
இந்த வருடம் ஜனவரி முதல் அமுலுக்கு வந்துள்ள காபன் வரியானது அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் இதற்கு அரச வாகனங்களுக்கு விதிவிலக்கு இல்லை எனவும் நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாத்திரம் குறித்த வரி அறவிடப்படாது என் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அரச வாகனங்களுக்கு காபன் வரி அறவிடப்படாது என சில ஊடகங்களால் தெரிவிக்கும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி அமைச்சு நேற்று(17) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.