(சிங்கப்பூர் புறப்படமுன், மகிந்தவின் வீடு சென்று 2 திருமண வாழ்த்துக்களை வழங்கிய மைத்திரி)
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று -23- காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்திற்கு அதிரடியாக விசிட் செய்தார்…
இப்படிச் சென்றது அரசியல் பேச்சு நடத்தவல்ல…
நாளை மஹிந்தவின் புதல்வர் ரோஹித்தவின் திருமணம் தங்காலையில் நடக்கிறது…
அதேபோல் மஹிந்தவின் காலஞ்சென்ற சகோதரியின் புதல்வர் ஒருவரின் திருமணம் இன்று கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் நடக்கிறது…
இந்த இரண்டு திருமண நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள் முன்னரே ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருந்தன …
ஆனால் இன்று முற்பகல் சிங்கப்பூர் செல்வதால் இந்த வைபவங்களில் கலந்து கொள்ள முடியாதென்பதை சொல்லி திருமண தம்பதியினருக்கு வாழ்த்தை தெரிவிக்கவே ஜனாதிபதி இன்று காலை மஹிந்தவின் இல்லம் சென்றார்…