மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சரின் கரத்தை பலப்படுத்தி கட்சியின் செயற்பாடுகளைச் சிறப்பாக வழி நடாத்த திடசங்கற்பம் கொள்ளுவதோடு தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும் என நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.
ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீ முடன் ஏறாவூர் நகரசபை முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட முக்கிய சந்திப்பொன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர்அஹமட்டின் ஏற்பாட்டுப் பங்குபற்றுதலோடு (புதனன்று) உயர்கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
இதன்போது மாவட்டத்தின் தற்போதைய களநிலைமைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் எந்நேரத்திலும் எத்தகைய தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் பணிகளை முடுக்கிவிடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு ஏறாவூர் சந்தை கட்டடப்பணிகளை முதலமைச்சான் வழி நடத்தலோடு முழுமையாகப் பூர்த்தி செய்ய தமது பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாக தெரிவித்ததுடன், பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் கலாசார மண்டபத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் தீவிரகவனம் செலுத்தப்படும் எனவம் தெரிவித்தார்.
முக்கியமாக ஏறாவூர், ஏறாவூர், பற்று பிரதேசத்திலுள்ள உள் பாதைகளின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10கோடி ரூபா நிதி தமது அமைச்சு மூலம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
அத்துடன் ஏறாவூர் அலிகார் பாடசாலைக்குரிய காணி பொலிஸ் நிலைய மாக இருப்பதை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக்கப்படும் எனவு ம் தெரிவித்ததுடன் உயர் கல்வி அமைச்சின் மூலமாக மேற் கொள்ளப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் பொறியியல் கல்லுரிகள் அமைப்பது தொடர்பில் ஏறாவூர்பிரதேசத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எம்.ஏச்.கபூர்,காணிஅபகரிப்பு, மற்றும் அழிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் முன்னர் தாங்கள் நீதிஅமைச்சராக இருந்து மேற்கொண்ட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார் இதற்கான நடவடிக்கை தாம் துரிதமாக மேற் கொள்வதாகவும் அவர் உறுதி அளித்தரர்.
அத்துடன் நகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக முன் வைக்கப்பட்ட ஏறாவூர் நகர பிரதேசத்தில் காபெட் வீதிகளை அமைக்கவும் உறுதியளித்தார்அத்துடன் இன்னும் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை இனங்கண்டு அதற்குரிய திட்ட அறிக்கை விண்ணப்பத்தினை உடனடியாக தரும் படியும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் சந்திப்பின்போது அமைச்சின் அதிகாரிகள் ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களான எஸ்.எம்.சருஜ் ,எம்.ரியால், எம்.ஜெமீல், ரசீது ஜீ.ஸ் , முன்னாள் தவிசாளர்களான எம்.சி.கபூர், எம்.நாஸர் முன்னாள் நகர சபை உறுப்பினர் எ.எம்.முஸ்தபா, ஸ்ரீ.ல.மு.காவின் உயர்பீட உறுப்பினர் எம்.எச்.கபூர், ஓட்டோ சங்கச் செயலாளார் வஹாப், ஸ்ரீல. மு.காவின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் ஜவாத். இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு பிராந்திய முன்னாள் முகாமையாளார் கனி, உதவி முகாமையாளர் அஸீஸ், பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலய அதிபர் ஜலால்தீன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பைரூஸ் ,மற்றும் கட்சியின் முக்கியஸ்தாகளான ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் ஆசிரியர், ராசீக், சாலிஹ், றபீக்ஹாஜியார் ,மாஹிர் என பலரும் கலந்து கொண்டனர்.