(கடுமையான விபத்தை சந்தித்த ரவீந்திர யசஸ்)
பிரபல நடிகர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரவீந்திர யசஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த கார் மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.