(போதை ஒழிப்புக்காக செயற்பட்டு, ஜனாதிபதியின் பாராட்டு விருது பெற்றார் பொலிஸ் அதிகாரி தௌபீக்)
போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல் எனும் ஜனாதிபதியின் பாராட்டு
சான்றிதழ் திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாபல் எம்.ஏ.சீ.தௌபீக் அவர்களுக்கும் கிடைக்கப் பெற்றது.
குறித்த பாராட்டு வைபவம் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனவரி 28 ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
போதை ஒழிப்புக்காக செயற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.
சிறப்பாக போதை ஒழிப்புக்காக செயற்பட்டமைக்காக கிண்ணியா பொலிஸ் கொஸ்தாபல் எம்.ஏ.சீ.தௌபீக் அவர்களும் ஜனாதிபதியின் பாராட்டுக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
-ஹஸ்பர் ஏ ஹலீம்-