• Sat. Oct 11th, 2025

“முஸ்லிம்கள் இப்தார் வழங்க வந்த நிதியை அனர்த்த நிதியாக நாட்டுக்கு வழங்கினர்”

Byadmin

Jun 23, 2017 ,

முஸ்லிம்கள் இப்தார் நடாத்த வைத்திருந்த நிதியை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவினர் எனவும், இந்த நன்கொடைகள் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கே பெரும்பாலும் கிடைத்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு வழங்குமாறு கூறி அந்த நிதியை அவர்கள் தரவில்லையெனவும், முழு இலங்கையர்களுக்கும் வழங்குமாரே கொடுத்தார்கள் எனவும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். இதனை விசேடமாக சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது எனவும்   என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் சட்டத்தின் முன் சகலரும் சமன். இதில் சாதாரண மக்கள், மதப்பெரியார்கள், என்று வித்தியாசம் இல்லை. யாராகினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *