(அக்குறணை நகரில் நிகழ்ந்த விபத்து!)
அக்குறணை நகரில் குருகொட சந்தியில் சற்றுமுன் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
8 ஆம் கட்டையில் இருந்து கடுகாஸ்தொட்டை நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
அதன் போது அங்கு இருந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் நபர் காயம் அடைந்துள்ள துடன் லொறியில் வந்த மூவரும் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட வளைவில் இதற்கு முன்னரும் இது போல் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.