(முதல் காஸா யுத்தம் 26.03.1917)
உஸ்மானிய கிலாபா முதலாம் உலகப்போரில் தனது பல பிரசேதங்களில் ஏற்பட்ட தோல்வியாலும்,மேற்கு ஆதரவு கிலாபா எதிர்ப்புக்கு குழுக்களாலும் பலவீனப்பட்டிருந்த போது 1917ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி பிரித்தானியா தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் நிவுஸிலாந்துக் கூட்டுப்படை புனித காஸா மீது தனது முதலாவது ஆக்கிரமிப்பு யுத்தைத் தொடுத்தது.
ஆயினும் காஸாவுக்கான உஸ்மானிய கிலாபாப் படை அதை எதிர்த்து பெருவெற்றி அடைந்தது.31000 துருப்புக்களுடன் ஜெனரல் முரேய் தலைமையிலான பிரித்தானிய படையை வெரும் 19000ம் துருப்புக்களைக் கொண்ட தளபதி தலால் பேய் தலைமையிலான உஸ்மானிய படை எதிர்த்து வெற்றியீட்டி 241 பிரித்தானிய படையினரை கைதுசெய்தது.ஜேர்மனிய மற்றும் ஹங்கேரிய படைகள் உஸ்மானிய படைகளுக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கினர்.இப்போரில் 350 பேர் ஷுஹதாக்களாக வீரமரணமடைந்தனர்.அன்றைய யூத ஸியோனிஸம் சார்பு படை அடைந்த தோல்வியை பழிவாங்கும் முகமாக இன்று யூத ஸியோனிஸப் படை இன்று 26ம் திகதி மார்ச் 2019ம் ஆண்டு காஸாவுக்கான எல்லா வழிகளையும் அடைத்து அவர்கள் மீது தனது மனிதாபிமற்ற அகோர தாக்குதலை அப்பாவி மக்கள் மிது நடத்திக்கொண்டிருக்கிறது.