(700 கோடி மாணிக்க கல்லும், தொடரும் கைதுகளும்)
மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீபே பிரதேசத்தில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய சந்தேகநபர் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.