• Sat. Oct 11th, 2025

ஞாயிற்றுக்­கிழமை மாலைரமழான் தலைபிறை பார்க்கப்படும்

Byadmin

May 3, 2019

(ஞாயிற்றுக்­கிழமை மாலைரமழான் தலைபிறை பார்க்கப்படும்)

புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்­கிழமை மாலை மஃரிப் தொழு­கையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடவுள்­ளது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்­பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்­பினர்கள்,கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

நாட்டில் எப்பாகத்திலாவது ரமழான் மாதத்­துக்கான தலைப்பிறை தென்­பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112 432110,0112 451245, 0714817380, பெக்ஸ் 0112 390783 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பிறைக்குழுவின் செயலாளர் மெளலவி அஸீஸ் (மிஸ்பாஹி) தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *