(நீர்கொழும்பு பிரதேச தாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம்)
நேற்று இரவு நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற
தாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுடைய, வாகனங்கள் வீடுகள், வீட்டு பாவனை பொருட்கள் , கடைகள் என பல பெறுமதிமிக்க பொருட்கள் தாக்கி நாசம் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுடைய சொத்துக்களை தாக்கி. சேதம் ஏற்படுத்துவதிலேயே வன்முறையாளர்கள் குறியாக செயற்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
