• Sat. Oct 11th, 2025

மீன்களிலே எந்த மீன் ருசியானது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Byadmin

Aug 10, 2025 ,

கடல் மீன்களில் புரோட்டீன், கோலின், அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமா இருக்கு. இவையெல்லாம் இருக்கிறதுனு தெரியாமலே நாம் மீன்கள் மீது ஆசைவைக்கக் காரணம், அதன் சுவையே. மார்க்கெட்ல காய்கறி வாங்கப் போனா, வெண்டைக்காயை ஒடிச்சிப் பார்க்கிறதும், தண்ணீர் ஆடுதானு தேங்காய ஆட்டிப்பார்க்கிறதும் பலருக்கு வழக்கம். அதேபோல மீன் வாங்கும்போது… அது நல்ல மீனா, கெட்ட மீனானு எப்படித் தெரிஞ்சுக்கிறது? பல தடவை நல்ல மீன்னு நினைச்சு வாங்கிட்டு வந்து, வயிற்றுக்கும் ஒத்துக்காம, வாய்க்கும் நல்லா இல்லாமப்போய்… வீட்டுல திட்டு வாங்கி… வாங்கி பல பேருக்கு மீன் குழம்பே பிடிக்காமப் போயிருக்கும். எப்படி நல்ல மீன் வாங்குறதுனு தெரிஞ்சிக்க,

கடல் மீன்களைப் பற்றி நிறையத் தெரிஞ்சு வெச்சிருக்கிற மீனவர், புது கல்பாக்கம் எஸ்.நாகராஜனை சந்திச்சுக் கேட்டு வந்தோம். அவர் தந்த யோசனைகள் இதோ…

1. மீன், பார்க்கும்போது புதுசா, ப்ரெஷ்ஷா இருந்தா நல்ல மீன்.

2. மீனின் செவுளைத் திறந்து பார்த்தா, செந்நிறமா இருக்கணும். சாம்பல் நிறமா இருந்தா, அது கெட்டுப்போன மீன்.

3. உங்களுக்குப் பிடிச்ச மீனாக இருந்து, அதை வாங்கியே ஆகணும்னு நீங்க நினைக்கும்போது, அதில் எங்காவது அடிபட்டிருந்தா, வேண்டாம் விட்டுருங்க.

4. மீனின் கண்கள் மங்கலா இல்லாம, தெளிவா இருக்கணும்.

5. ஐஸ் அதிகம் சேர்ந்த மீன் ஆகாது. ஐஸ் அதிகம் சேர்ந்திருந்தா, மீனின் மேல் விரலால் கோடு போட்டா தெரிஞ்சுடும்.

6. நீங்கள் வாங்கும் மீன் கெட்டுப்போனதா இருந்தா, அது ஃபுட் பாய்ஸன் ஆகும்.

7. செதில் அதிகமா இருக்கிற மீனும், உள்ளே முள் அதிகமா இருக்கிற மீனும் ருசியா இருக்கும். ஆனா, குழந்தைகள் சாப்பிட முடியாது.

8. மீனைத் தொட்டுப் பார்க்கும்போது, நொள நொளனு இருக்கக் கூடாது.

9. நண்டை கையில் எடுத்துப்பார்க்கும்போது வெயிட்டா இருக்கணும்.

10. பூச்சியைப் போல சிவப்பு நிறத்துல இருக்கிற இறாலை வாங்காம, ஃப்ரெஷ்ஷா, தெளிவா இருக்கிறதை வாங்குறது நல்லது.

இப்படியெல்லாம் நீங்க சரிபார்க்க மார்க்கெட்ல அவகாசம் கிடைக்குமா… மீனைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பாங்களா? அது, உங்கள் சாமர்த்தியம்!

உங்க வீட்டிலும் இனிமே சூப்பர் மீன்குழம்புதான்னு சொல்லுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *