(ரவூப் ஹக்கீம் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு… )
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
சென்னையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ரவூப் ஹக்கீம், ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அண்மைய தேர்தல் வெற்றி தொடர்பில் தனது வாழ்த்துக்களை ரவூப் ஹக்கீம், ஸ்டாலினிடம் தெரிவித்ததோடு, இலங்கையில் முஸ்லிம் மக்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கியுள்ளார்.