(“இன்னும் உறுதியாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை” மஹிந்த)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று (18) மாலை கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். பலர் பல்வேறு விதமாக ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக கருத்து தெரிவித்த போதிலும், இன்னும் உறுதியாக வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். வேட்பாளர் சம்பந்தமாக சரியான தருணத்தில் தெரிவிப்பதாகவும், எவ்வாறாயினும் முன்நிறுத்தப்படும் வேட்பாளர் சந்தேகமின்றி ஜெயிப்பார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.