• Sat. Oct 11th, 2025

ஆண்களே உஷார்… இதனால் கூட மலட்டுத்தன்மை ஏற்படுமாம்

Byadmin

Jul 3, 2017

போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து சியோன் நேஷனல் பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.

கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு லட்சத்து ஆறாயிரத்து ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது, இதில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என தெரியவந்துள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் மிகவும் பரபரப்பான நெரிசல் மிகுந்த பகுதியில் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மனநிலை பாதிப்பு, இதயநோய்கள் வரும் வாய்ப்பும் அதிகமாம், ஒலி அளவு 55 டெசிபெலுக்கு அதிகம் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் ஒலி அளவு 40 டெசிபெல் மட்டுமே இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *