திருகோணமலை -பஞ்ச ஈஸ்வரங்க ளில் ஒன்றாக விளங்கும் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம் இராவணனின் கதையோடு தொடர்பு பட்ட ஒன்றாகும். இலங்கை வேந் தன் இராவணன் இக்கோயிலுக்கு ஒரு சோடி மான்களை அன்பளிப்பு செய்துள்ளான் அவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்ட மான்களின் சந்ததிகள் தான் இன்றும் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
எனினும் திருகோணமலை கோட்டைக்குள்ளும்,கோணேஸ்வரம் கோயிலுக்கு அருகிலும் வாழ்ந்த மான்கள் தற்பொழுது அருகி வருகின்றன. கோயில் வளாகம் மற்றும் கோட்டைகளை விட்டு அவைகள் வெளியில் வந்து விட்டன.
இதனால் அன்று கிடைத் ததை போன்று உணவும், பாதுகாப்பும், இன்று கிடைப்பதில்லை.அத்துடன் மக்களின் வருகையும்,அதன் இருப்பை கேள்விக்குறியாக்கி விட்டது.
இதன் காரணமாக இவைகள் வெளியில் நடமாடுகின்றன. உணவுக்காக உள்ளூர் மற்றும் வெளியூர் உல்லாசப் பயணிகளால் வீசப்படுகின்ற எஞ்சிய உணவுப் பதார்த்தங்களுடன்,பொலித்தீன்கள் யோகட் கோப்பைகளை உட்கொள்கின்றன.
சுமார் 500 க்கும் மேற்பட்ட மான்கள் ஆரம்பத்தில் காணப்பட்ட போதிலும் தற்பொழுது 200 க்கும் குறைவான மான்களே காணப்படுகின்றன. இவைகள் பாதுகாப்பின்றி வீதியோரங்களிலும், கடற்கரையோரங்களிலும், சிலருடைய வீடுகளின் தாழ்வாரங்களிலும் வாழ்ந்து வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமே காணப்படும் இத்தகைய மான்களை பாது காப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும். இவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடனே நேற்று திருகோணமலை மாவட்ட இளைஞர்களால் சிரமதானப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.