போராட்ட காலத்தில் பல்கலைக்கழக கல்வியை தொடாராது இருந்த முன்னாள் போரளிகள் 36 பேருக்கு அரச திணைக்களங்களில் பட்டதாரிகாளாக சோ்த்துக் கொள்வதற்காக புனா்வாழ்வு மீள்குடியேற்ற சிறைச்சசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இப்பட்டதாரிகளது விபரங்களை ஒன்று திரட்டி அமைச்சா் சமாப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தினை அமைச்சரவை அங்கீகரித்து நேற்று முன்தினம் இவா்களுக்கு கொழும்பில் உள்ள பொதுநிர்வாக முகாமைத்துவ அமைச்சில் நோ்முகப்பரீட்சை நடைபெற்றது. அதன் பினனா் இவா்கள் அமைச்சர் சுவாமிநாதனைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா் அத்துடன் மேலும் 20 பேர் விடுபட்டுள்ளனா் அவா்களையும் நியமன் பெற்றுத் தரும்படியும் தமது நியமனங்களை நாங்கள் வாழும் அந்த பிரதேச செயலாளா் கச்சேரிகளில் நியமத்தினை பெற்றுத்தரும்படியும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாங்கள் பல்கலைக்ககழங்களில் கல்வியைத் தொடாராது இயக்கத்தில் 2004,2006,2007 ஆண்டுகளில் இணைந்திருந்தோம் அதன் பின்னா் 2012 காலப்பபகுதிகளில் புனா்வாழ்வளிக்கப்பட்டு தமது பட்டப்படிப்பினை முடித்தும் கடந்த 2 வருடங்களாக தொழில் அற்று மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள அனைவரும் திருமணம் முடித்தவா்கள், அத்துடன் 35 வயதுக்கு மேற்பட்டோா். எங்களது நிலையறிந்து அமைச்சா் சுவாமிநாதன் அரசின் கவணத்திற்கு கொண்டுவந்து இவ் நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் போரளிகள் பட்டதாரிகள் சாா்பாக நாகேந்திரம் மரியயபெஸ்டியன் தெரிவித்தாா்.
-அஷ்ரப் ஏ சமத் –