• Sun. Oct 12th, 2025

கொசு ஒழிப்புப் பணிகளில் இலங்கை ராணுவம்

Byadmin

Jul 3, 2017

நாட்டின் மிக மோசமான டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அதற்குக் காரணமான கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க, சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் பணியில் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஈரப்பதம் நிறைந்த மழைக்காலப் பருவநிலை, வெள்ளத்தால் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் குவிந்து வரும் அழுகிய நிலையில் உள்ள குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர கொசுக்கள் இனப் பெருக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளன.

கொழும்பு நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தன் இருபத்தி ஐந்து குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 71 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு முழுவதும் பாதிக்கப்பட்ட 55 ஆயிரத்தை விடவும் அதிகம்.

இந்த ஆண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் 200-க்கும் அதிகமானோரை உயிரிழந்துள்ளனர். 30 பேரின் உயிரிழப்புக்கு காரணமான குப்பை மேடு சரிந்ததை தொடர்ந்து, ஏப்ரல் மதம் முதல் நகராட்சியின் குப்பை சேகரிப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிபிசி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *