தெஹிவளை மிருகக் காட்சிசாலை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி முதல், மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என, நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
இந்த மிருகக் காட்சிசாலையை, காலை 7மணி முதல் தொடங்கி இரவு 10மணி வரை மக்கள் பார்வையிட முடியும் என,அவர் மேலும் தெரிவித்தார்.