• Thu. Oct 23rd, 2025

நேரடியாக களத்தில் குதித்து, அதிரடி காட்டிய நாமல் – 10 நாட்களில் 16000 கட்டில்கள்

Byadmin

May 17, 2021

கொவிட் நோயாளர்களுக்கு உதவும் வகையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்ட 10 நாட்களில் 10,000 கட்டில்கள் வேலைத்திட்டத்தை அதில் தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட இளைஞர் யுவதிகள் (16) நிறைவுசெய்தனர்.

திட்டத்தின் குறிக்கோளை அடைவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணி முன்னிலை வகித்ததுடன் அதற்கு அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் பங்களிப்பு செய்திருந்தன.

10 நாட்களில் 10,000 கட்டில்கள் வேலைத்திட்டம் கடந்த 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, இன்று அந்த இலக்கை தாண்டி புதிதாக சுமார் 16,000 கட்டில்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

கட்டில்களை தயாரித்தல் கொவிட் வைரஸிற்கான சிகிச்சையா என ஒரு சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த தேசிய நோக்கத்திற்காக இளைஞர்கள் தன்னார்வத்துடன் இணைந்து கொண்டமை எவ்வித கட்சி நிற பேதமும் இன்றி இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலாகும்.

அதன் விளைவாக இந்த திட்டத்தின் மூலம் பல வைத்தியசாலைகளின் புனரமைப்பு நடவக்கைகளில் இளைஞர்கள் யுவதிகள் ஈடுபட்டுள்ளதுடன் சகல வசதிகளுடன் கூடிய மேலதிக 13 வார்டு வளாகங்கள் புதிதாக வைத்தியசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளன. 

கட்டில்களின் இலக்கை அடைந்துள்ள போதிலும் இப்பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுமாறு இளைஞர் மற்றும் விறையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடு முழுவதும் உள்ள மனிதாபனம் மிக்க இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஊடக பிரிவு

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *