• Thu. Oct 23rd, 2025

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, விருந்துபசார நிகழ்வில் ஈடுபட்ட குழுவினர் கைது

Byadmin

May 17, 2021

இராஜகிரிய பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்த ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்களுடனேயே குறித்த விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

(16) முற்பகல் 11 மணியளவில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், மற்றுமொரு சந்தேகநபர் ஏற்கனவே 2 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *