கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியிடம்; கதைக்காமல், நாட்டை 2 வாரங்களுக்கு முடக்குமாறுஊடகங்களிடம் சில வைத்திய சங்கங்கள் கூறுவது வேடிக்கையானது என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டை 2 வாரங்கள் முடக்குமாறு கூறும் வைத்திய சங்கங்களின் பிரதிநிதிகள், கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் கூற வேண்டிய விடயத்தை ஜனாதிபதியும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் தெரிவிப்பார்களானால், இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு, ஏதாவது ஒரு தீர்மானத்துக்கு வரலாம் என்றும் ஆனால், இவர்கள் அக்கூட்டத்தில் எதுவும் பேசாமல் தொலைக்காட்சி நேர்காணலில் நாட்டை முடக்குவது பற்றி கதைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.