• Sun. Oct 12th, 2025

டெல்டாவை இலகுவாகக் கருத வேண்டாம்: பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்

Byadmin

Jul 16, 2021

டெல்டா கொவிட் வைரஸ் திரிபு நாடு முழுவதும் தனி நபர்கள் மத்தியில் பரவி வருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, டெல்டா திரிபை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றார்.

கொவிட்-19 மற்றொரு அலை குறித்து உலகம் எச்சரித்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண்பது குறித்து ரோஹண கூறினார்.

கொழும்பு, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

இஸ்ரேல், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது பிரஜைகளுக்கு 60 வீதம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. இலங்கையில் நிர்வகிக்கப்படும் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் காரணமாக ஜூன் மாதத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என ரோஹன கூறினார்.

புதிய கொவிட் வைரஸ் அலைகள் காரணமாக மேற்படி நாடுகள் இப்போது ஒரு கொடிய சூழ்நிலையை எதிர்கொள்கின்றன. எனவே டெல்டா திரிபை நாடு நிராகரிக்க முடியாது என்றார்.

மேலும் ஆர்ப்பாடங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கூட்டங்களைத் தவிர்க்குமாறு ரோஹண பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

கொள்கை வகுப்பாளர்கள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த மாட்டார்கள். நாம் இஸ்ரேல், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *