(எம்.மனோசித்ரா)
இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையில் சுகாதாரக் கொள்கை ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களுக்கிடையேயான இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பரிஸில் உள்ள பிரான்ஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற இந்தோ – பசுபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் மட்ட மன்றத்தின் பக்க அம்சமாக, சர்வதேச கூட்டாண்மைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஜுட்டா உர்பிலைனனை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்தித்தார்.