• Sun. Oct 12th, 2025

சுற்றுலாத்துறைக்கு இந்தியாவின் பங்களிப்பு அளப்பறியது – சுற்றுலாத்துறை அமைச்சர்

Byadmin

Feb 25, 2022

இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களிலும் இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க கூடும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்திய பயண முகவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

இந்திய பயண முகவர்களுக்கான 66ஆவது மாநாடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் சுற்றுலாத்துறை சேவை நிறுவனங்களினதும்  நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளர்கள் உள்ளடங்களாக சுமார் 500 பேர் கலந்துக்கொள்ளவுள்ளார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லுகையில் கொவிட் -19 தொற்று பரவல் தாக்கத்தினையும் எதிர்க்கொள்ள நேரிட்டது. 

கொவிட் தாக்கம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல.

சிறந்த திட்டங்களை செயற்படுத்தியதன் காரணமாக கடந்த 5மாத காலத்திற்குள் மாத்திரம் அண்ணளவாக ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.

இவ்வருடத்தில் கடந்த மாதம் 80000 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் இம்மாத இறுதிக்குள் ஒரு இலட்ச இலக்கினை அடைவோம். 

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த சுற்றுலாத்துறை அதிகார சபையும் அதனுடன் ஒன்றினைந்த நிறுவனங்களும் முன்னெடுத்த சேவை அளப்பரியது.

இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களிலும் இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க கூடும். 

மேலும் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 150000 இற்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவது எமது பிரதான இலக்காகும். 

2008 ஆம் ஆண்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தார்கள் இவ்வாறான இலக்கை மீண்டும் அடைவது எமது பிரதான நோக்கமாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *