• Sun. Oct 12th, 2025

அமைச்சர் பசில் நாடு திரும்பியுள்ளார்

Byadmin

Mar 18, 2022

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மதியம் நாடு திரும்பியுள்ளார். அவர் புது டெல்லியில் இருந்து இன்று மதியம் 1.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

நிதியமைச்சருடன் அவரது பாரியார், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் இந்தியாவுக்கு சென்றிருந்தனர். நிதியமைச்சரின் இந்திய விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர் கடனுதவியை பெறுவதற்கான இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதுடன் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *