• Sun. Oct 12th, 2025

இலங்கைக்கு உதவ கைக்கோர்த்த ஜப்பான் மற்றும் இந்தியா!

Byadmin

May 27, 2022

இலங்கையின் நெருக்கடியான சூழலில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் டோக்கியோவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய – ஜப்பான் பிரதமர்கள் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி Quad மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், எரிசக்தி, முதலீடு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அவர்கள் இலங்கையின் நிலைமை குறித்து கலந்துரையாடியதுடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் மோசமடைந்துவரும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் இருநாடுகளும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவதாக மீளவும் உறுதிப்படுத்தியதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *