நாளைய தினமும் (28) சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், நாளை எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 24, 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் எரிவாயு விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.