• Sun. Oct 12th, 2025

20’ வருடங்களில் பின்னர் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அவுஸ்ரேலியாவை வீழ்த்திய இலங்கை !

Byadmin

Jun 19, 2022

!இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பான ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், அணித்தலைவர் பிஞ்ச் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 137 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அதன்படி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *