சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தனது தலைவர் பதவியை இராஜினமா செய்வதாக அறிவிக்கப்பட்டது.
ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் நிலையில். தினேஷ் சந்திமால் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகவும் உபுல் தரங்க ஒருநாள் மற்றும் 20/20 அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, குசால் பெரேரா 3 வகை கிரிக்கெட் அணிக்கும் உதவித்தலைவராகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.