தற்போதுள்ள கோவிட் அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று மீண்டும் ஏற்பட்டால், அது தற்போது பரவி வரும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது