• Sat. Oct 11th, 2025

மியன்மார் அகதிகளை தனி வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை

Byadmin

Aug 8, 2017

மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் முஸ்லிம் அக­திகள் தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அகற்­றப்­பட்டு கல்­கி­ஸையில் தனி­யான வீடொன்­றுக்கு இடம் மாற்­றப்படவுள்ளனர்.

மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு இடம் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக பொலிஸார் தெரி­வித்து வந்த நிலையில் அவர்கள் அங்­கி­ருந்தும் இடம் மாற்­றப்­படவுள்ளனர் என மியன்மார் அக­திகள் விவ­கார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்­துள்ளார்.

தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்கு வெளி­வி­வ­கார அமைச்சு, குடி­வ­ரவு –குடி­ய­கல்வு திணைக்­களம், மிரி­ஹான பொலிஸார், யு.என்.எச்.சி.ஆர் நிறு­வனம் என்­பன அனு­மதி வழங்­கி­யுள்­ள­தா­கவும் அசாத் சாலி தெரி­வித்தார்.

மியன்மார் அக­தி­களை வேறோர் இடத்­துக்கு இடம்­மாற்­று­வ­தற்கு நீதி­மன்றின் உத்­த­ர­வினைப் பெற்­றுக்­கொள்­ள­பட வேண்­டி­யுள்­ளது. எதிர்­வரும் 17 ஆம் திகதி அக­திகள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இந்­நி­லையில் 17 ஆம் திக­திக்கு முன்பு மியன்மார் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்­கான உத்­த­ர­வினைப் பெற்­றுக்­கொள்­வ­தாக அசாத்­சாலி தெரி­வித்தார்.

இந்­தி­யா­வி­லி­ருந்து படகு மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் பய­ணித்த போது படகு கோளா­றுக்­குள்­ளாகி இலங்­கையின் வடக்கு கடல் எல்­லையில் கைது செய்­யப்­பட்­டனர். பின்பு அவர்கள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்படுத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் 7 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் 16 பிள்­ளைகள் அடங்­கு­கின்­றனர்.

இவ் அக­தி­களில் இளம் பெண் ஒருவர் மிரி­ஹான பொலிஸ் நிலைய கான்ஸ்­டபிள் ஒரு­வ­ரினால் பல­வந்­த­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிள் அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காணப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

-ARA FAREEL  –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *