• Sat. Oct 11th, 2025

சூடானில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு

Byadmin

Apr 22, 2023

சூடான் குடியரசின் அண்மைக்கால நிலைமையை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

சூடான் குடியரசின் அங்கீகாரம் பெற்ற கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் சூடானில் உருவாகி வரும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கார்ட்டூம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

தூதரக மின்னஞ்சல்  slcaironsular@gmail.com மற்றும் தொலைபேசி +201272813000 மற்றும் கார்ட்டூமில் உள்ள இலங்கையின் தூதர் சயீத் அப்தெல்வினுடைய தொலைபேசி எண் +249912394035 மூலம் உடனடியாக உதவி பெறலாம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *