இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த விளையாட்டுச் சபையின் தலைவர் பதவியை மஹல வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் மூலோபாயங்களை வகுக்கும் நோக்கில் தேசிய விளையாட்டுச் சபை உருவாக்கப்பட்டது.
என்ன காரணத்தினால் பதவி விலகுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.