பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில்கள் !
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள பண வசதி குறைந்த, திறமையான முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்க ஜித்தாவி லுள்ள இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
மருத்துவம், பொறியியல், விவசாயம் , பல்மருத்துவம் ,
ஆகிய பீடங்களுக்கு தெரிவான மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது வட்டியற்ற கடன் என்பது குறிப்பிடத்தக்கது.
இலகு தவணைகளில் இப்பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும். பட்டம் பெற்று தொழிலும் கிடைத்து வருமா னம் உழைக்கும் போது இக்கட னை,இவர்கள் தவணை அடிப் படையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் உள்ளூரிலோ வெளி நாடுகளிலோ புலமைப் பரிசில் களை பெற்றிருக்கக் கூடாது.
மேலும், 2017.12.31க்குள் குறித்த மாணவர்கள் 24 வயதுக்கு மேற்படாதவர்களாக இருப்ப துடன், வறுமை நிலையிலுள்ள பெற்றோர்களின், பிள்ளைகளுக்கே இந்த புலமைப்பரிசில் கள் வழங்கப்படும்.
இந்த புலமைப் பரிசில் நட வடிக்கைகளை மாளிகாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் மேற்கொள்ளும்.
எதிர்வரும் (30) க்கு முன்னர்
மாளிகாவத்தை,
இலக்கம் 10,
ரஜபொக்குன மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா
இஸ்லாமிய நிலையத்துக்கு, விண் ணப்பங்களை மாணவர்கள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.