சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடருக்கான அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ இணைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசித்த பெர்னாண்டோ விளையாடவுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு SSC சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (24) நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.