இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இப்போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர், இது தில்ஷான் மதுஷங்கவின் அறிமுக டெஸ்ட் போட்டியாகும்.
இந்த டெஸ்ட் போட்டியின் இலங்கை அணியில்,
திமுத் கருணாரத்ன(தலைவர்)
நிஷான் மதுஷ்க
குசல் மெண்டிஸ்
எஞ்சலோ மெத்யூஸ்
தினேஷ் சந்திமல்
தனஞ்சய டி சில்வா
சதீர சமரவிக்ரம
ரமேஷ் மெண்டிஸ்
பிரபாத் ஜயசூர்யா
அசித பெர்னாண்டோ
தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.